மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

திமுகவை நோக்கி அமமுக புள்ளிகள்: தினகரன் ரியாக்‌ஷன்!

திமுகவை நோக்கி அமமுக புள்ளிகள்: தினகரன் ரியாக்‌ஷன்!

தமிழகத்தில் விடுபட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடத்த, தமிழக அரசு ஆலோசனை செய்துவருவதால் மற்ற கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகின்றன. இந்நிலையில் நேற்று அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து முக்கியப் புள்ளிகள் சேர்ந்ததால், அடுத்தடுத்து அதிமுக, அமமுகவை வேட்டையாட முடிவெடுத்திருக்கிறது திமுக.

நேற்று ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் தகுதி நீக்க எம்.எல்.ஏ.வும் அமமுகவின் அம்மா பேரவை செயலாளருமான மானாமதுரை மாரியப்பன் கென்னடி, மற்றும் அமைப்பு செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் இருவரும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள், இவர்களைத் தொடர்ந்து மற்ற சில நிர்வாகிகளும் திமுக வில் இணைவதற்கு தயாராகி வருவதாக சொல்கிறார் அமமுக மூத்த நிர்வாகி ஒருவர்

ஒருபக்கம் சசிகலாவின் ஆடியோ அரசியல் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அனுமதிக்கமாட்டேன் என்று மாவட்டம் தோறும் தீர்மானங்கள் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வரும் டிடிவி தினகரன் நிர்வாகிகள் கூட்டமோ சந்திப்போ நடத்தவில்லை. இந்த நிலையில்தான் அமமுகவில் இருக்கும் நிர்வாகிகள் மனம் மாறி மாற்று கட்சிகளுக்கு தாவத் தொடங்கி விட்டார்கள்.

இதைக்கண்டு மிரண்டுபோன தினகரன் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களைத் தொடர்பு கொண்டு, “நிர்வாகிகளை இன்னும் கொஞ்சம் நாள் அமைதியாக இருக்க சொல்லுங்கள். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனைத்துப் பதவிகளுக்கும் ஆட்களை பிடித்து பட்டியல் அனுப்புங்கள்” என கூறி வருகிறார்,

ஆனால் அமமுக முக்கிய நிர்வாகிகளோ, ‘நம்ம ஆளுங்களை மத்த கட்சிகள் பிடிச்சுக்கிட்டு போயிட்டிருக்காங்க. இவர் என்னாடான்னா உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆள் பிடிங்குறாரு. எத்தனை காலம் இந்தப் போராட்டம்?”என்று தங்களுக்குள் விரக்தி விவாதம் நடத்தி வருகிறார்கள்.

-வணங்காமுடி

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 26 ஜுன் 2021