மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

அணில்கள் ஓய்வதில்லை: செந்தில் பாலாஜி Vs செல்லூர் ராஜூ

அணில்கள் ஓய்வதில்லை: செந்தில் பாலாஜி Vs  செல்லூர் ராஜூ

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மின் வெட்டுகளுக்கு காரணம் மின் கம்பிகளிடையே அணிகள் ஓடுவதும் ஒன்று என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

உலக அளவில் மின்சார விநியோக தடைபாடுகளுக்கு அணில்களும் ஒரு காரணம் என்பதை அவர் விளக்கியபோதும் சமூக தளங்களில் இப்போது வரை அணில் விவகாரத்தை கேலி பொருளாக்கி அமைச்சர் செந்தில்பாலாஜியை கிண்டலடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று (ஜுன் 26) மதுரையில் அதிமுக மாணவரணிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “முதல்ல நான் தப்பிச்சிட்டேன். ஊடகங்களயும் சமூக தளங்களையும், முதலமைச்சரும், சில அமைச்சர்களும் என்னை நவீன விஞ்ஞானினு சொன்னாங்க. இப்ப நான் தப்பிச்சிட்டேன். இப்ப புதிய கண்டுபிடிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் அருமையா வந்துட்டாரு, நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்னு தலைவர் பாட்டு வரும். அதுபோல அவர் அணிலை கண்டுபிடிச்சிருக்காரு. இப்ப உண்மையான விஞ்ஞானியாயிட்டாரு. எங்க ஆட்சியில அணிலெல்லாம் வெளிநாட்டுக்கு ஒடிடுச்சு. இப்பதான் எல்லாம் வந்து கம்பியில ஓடுது. அதனால நம்ம தமிழன் செந்தில்பாலாஜிக்கு ஆஸ்கர் பரிசும், நோபல் பரிசும் கொடுக்கணும்” என்று தன் பங்குக்கு கிண்டலடித்தார்.

இதற்கு உடனடியாக மின்சாரத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் பிரச்சனைகளுக்கு அணில்களே காரணமென, 2020ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் அளித்துள்ளது. பார்க்க படித்தவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் அறிவியல் அறிஞர் செல்லூர் ராஜூ , இந்த விளக்கத்தை பற்றி தங்கமணியிடமோ அல்லது இந்த பதிலை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிந்து, இதை ஆராய்ந்து கிடைக்க போகும் நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிடம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

- வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 26 ஜுன் 2021