மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

டெண்டர் முறைகேடு உறுதியானால் நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு

டெண்டர் முறைகேடு உறுதியானால் நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு

கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு குறித்து அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்வை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் மற்றும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “சாலை வசதி, மயானம், கழிவு நீர் அகற்றும் திட்டங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், வருகின்ற பட்ஜெட் கூட்டதொடரில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிற இடங்களின் அருகேயுள்ள குளங்களை சீரமைத்து தண்ணீர் நேரடியாக அங்கு செல்வதுபோல ஏற்பாடுகள் செய்யப்படும். மழைநீர் சேகரிப்பு என்ற அளவில் ஆங்காங்கே கிணறுகளை அமைத்து, மழைநீரை நிலத்துக்குள் கொண்டு சேர்க்கும் பணியையும் எடுத்து இருக்கிறோம்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தற்போது 900MLD தண்ணீர் கிடைத்து வருகிறது. கூடுதலாக 400 MLD தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 2 ஆண்டுகளுக்குள் 100% அளவிற்கு தண்ணீர் கிடைக்கும். வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்.

டெண்டர் முறைகேடுகள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாங்கள் இப்போது திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கிற பணியை கையில் எடுத்திருக்கிறோம். சொல்லப்பட்டிருக்கிற குறைபாடுகள் காலத்தால் நிச்சயமாக கண்டறியப்படும். கடந்தகால டெண்டர் முறைகேடு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தவறுகள் செய்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 26 ஜுன் 2021