மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

டெல்டா ப்ளஸ்: மூன்றாவது அலையா?

டெல்டா ப்ளஸ்: மூன்றாவது அலையா?

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யச் சென்னையில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் 116ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் வெள்ளக் கோயில் சாமிநாதன், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் இன்று (ஜூன் 26) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “ தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14 இடங்களில் வைரஸ் பகுப்பாய்வு மையங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த போது ஆயிரக்கணக்கான மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துப் பரிசோதிக்கப்பட்டது. இதில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்து அந்த தகவல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த 9 பேரின் தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் குணமடைந்து அவரவர்களின் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். அதில் ஒருவர் திருமணமே செய்துகொண்டார். மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும்தான், இறந்த பின்பு மாதிரி எடுக்கப்பட்டது.

கொரோனா உச்சத்திலிருந்த போது ஏற்பட்ட தொற்றுதான் இது. இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. டெல்டா ப்ளஸ் மூன்றாவது அலையாக ஏற்படுமோ என மருத்துவ நிபுணர்களின் ஆய்வுகள் வெளிப்படுகிறது.

எனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் மாதிரிகளைப் பெங்களூருவுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, தமிழகத்தில் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். நாட்டிலேயே மாநில அரசு சார்பில் முதன் முறையாகச் சென்னையில், பரிசோதனை மையம் அமைக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் பெறக்கூடிய அனுமதிக்காகக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் உபகரணங்கள் வாங்குவதற்கு 2.5 கோடி ரூபாய் செலவாகும். அதற்கும் இன்று உத்தரவிட்டுள்ளோம். 20-25 நாட்களில் இந்த மையம் அமைக்கப்படும். இனி பரிசோதனை மாதிரிகளை வெளிமாநிலத்திற்கு அனுப்பத் தேவையிருக்காது.

தமிழகத்தில் 80 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் உள்ளது. இரண்டாம் அலைக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 26 ஜுன் 2021