மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

ஒன்றிய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை : ப.சிதம்பரம்

ஒன்றிய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை : ப.சிதம்பரம்

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என பெட்ரோல் விலை உயர்வு குறித்து முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை பெட்ரோல் விலை ரூ.99ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.99.19 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 93.23 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி,கும்பகோணம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரும் கஷ்டப்படுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐ தாண்டியது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணெய் விலை 105 டாலரை தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐ தாண்டவில்லை. இன்றைய நிலைக்கு ஒரே காரணம் ஒன்றிய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை.

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக ஒன்றிய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது. திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள்தோறும் அனுபவிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 26 ஜுன் 2021