மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு!

உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு!

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ”உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். முக்கிய தகவல்களை தெரிவிக்காதது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறுவது போன்ற செயல். எனவே, உதயநிதி வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் வெற்றியையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

சனி 26 ஜுன் 2021