மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

60 நாள்களில் சிஎம்டிஏ அனுமதி: அமைச்சர் முத்துசாமி

60 நாள்களில் சிஎம்டிஏ அனுமதி:  அமைச்சர் முத்துசாமி

சிஎம்டிஏவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாள்களில் அனுமதி வழங்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வான உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “சிஎம்டிஏ-வில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகளவில் உள்ளது. சிஎம்டிஏ-வில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் ஊழியர்களின் பணிச்சுமை குறையும்.

சிஎம்டிஏவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்க வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது, குப்பைகளை அகற்றுவது ஆகியவற்றில் தனி கவனம் செலுத்துவோம். கோயம்பேடு காய்கறி சந்தையில் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு செய்ய இருக்கிறோம்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசியவர், “இந்த கூட்டத்தில் முதல்வரின் நீண்ட கால திட்டம் பற்றி பேசியுள்ளோம். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் அதை தீர்ப்பதில் உள்ள கால தாமதம் விரைவில் சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 26 ஜுன் 2021