மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

ஒன்றிய அமைச்சரின் கணக்கை முடக்கிய ட்விட்டர்

ஒன்றிய அமைச்சரின்  கணக்கை முடக்கிய ட்விட்டர்

இந்திய அரசின் புதிய டிஜிட்டல் தகவல் தொழில் நுட்ப விதி முறைகளை பின்பற்றுவதில் ட்விட்டர் நிறுவனம் முரண்டு பிடித்தை அடுத்து, இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் தனது சட்ட பூர்வமான பாதுகாப்பை சில நாட்களுக்கு முன் இழந்தது.

இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னணியில்.... இன்று (ஜூன் 25) பகல் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு சுமார் ஒரு மணி நேரம் முடக்கப்பட்டு பின் மீண்டும் இயக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இன்று மாலை 3.42 மணிக்கு ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டர் தளத்தில், “அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டில் ட்விட்டர் தளம் எனது கணக்கை அணுக மறுத்துவிட்டது. என் கணக்கை முடக்கும் முன் எந்த முன் அறிவிப்பையும் வழங்கத் தவறிவிட்டனர்”என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஒரு மணி நேரத்தில் தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டதாக சொல்லியிருக்கும் ரவிசங்கர் பிரசாத், “எனது கணக்கு மீண்டும் பூட்டப்படும் என்றும் அதற்கு எதிராக கூடுதல் அறிவிப்புகள் வந்தால் இடைநிறுத்தப்படக்கூடும் என்றும், தங்கள் பதிப்புரிமை கொள்கையை மீறுவது போல பதிவுகளை இடுகையிட வேண்டாம். இடுகையிட உங்களுக்கு அங்கீகாரம் இல்லாத எந்தவொரு பதிவையும் உடனடியாக உங்கள் கணக்கிலிருந்து அகற்றவும்' என்று ட்விட்டர் மேலும் கூறியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் எந்தவொரு பதிப்புரிமை மீறலையும் செய்யவில்லை என்று வலியுறுத்திய

ரவிசங்கர் பிரசாத், “கடந்த பல ஆண்டுகளில், எந்தவொரு தொலைக்காட்சி சேனலும் அல்லது எந்தவொரு தொகுப்பாளரும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட எனது நேர்காணல்களின் இந்த செய்தி ’கிளிப்’புகள் தொடர்பாக பதிப்புரிமை மீறல்கள் குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எவ்வாறாயினும், ட்விட்டர் தளம் இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும், சமரசத்திற்கு வாய்ப்பில்லை" என்றும் ஒன்றிய அமைச்சர் பிரசாத் கூறியுள்ளார்.

புதிய டிஜிட்டல் தொழில் நுட்ப விதிகளை அமல்படுத்தும் அமைச்சரே ரவிசங்கர் பிரசாத் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 25 ஜுன் 2021