மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

தமிழ்நாட்டில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் : சுகாதார அமைச்சர்!

தமிழ்நாட்டில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் : சுகாதார அமைச்சர்!

தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூன் 25) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள், பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அனுப்பப்பட்ட 1100 மாதிரிகளில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொரட்டூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் நெகடிவ் என்றுதான் வந்துள்ளது.

இந்த டெல்டா பிளஸ் கொரோனா இரண்டாவது அலையிலேயே ஏராளமானோருக்கு வந்துபோயிருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. இப்போது உள்ள தடுப்பூசியே டெல்டா பிளஸ் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும். ஏனெனில், இந்த வைரஸ் அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அதே சிகிச்சைதான் இவர்களுக்கும் அளிக்கப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர்,” பெங்களூருவுக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமாவதால், தமிழகத்தில் வைரஸ் பகுப்பாய்வு மையம் தொடங்கவிருக்கிறோம். டெல்டா பிளஸ் போன்ற வைரஸ் பரிசோதனைகளை செய்ய, நாட்டில் மொத்தம் 14 இடங்களில் மட்டுமே பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னையிலேயே டெல்டா பிளஸ் போன்ற வைரஸ் மாதிரிகளை கண்டறியக் கூடிய, அதிநவீன வசதிகளுடன் கூடிய பரிசோதனை மையங்களை சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த வைரஸால் பாதிப்பு அதிகமாகக்கூடாது என்பதற்காக, அதனை கட்டுக்குள் வைத்திருக்க சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை நிறுவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,822 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, மதுரையில் தலா 500, மற்ற மாவட்டங்களில் 200-300 என்ற அளவில் படுக்கைகள் உள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சையால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது.

கருப்பு பூஞ்சைக்கு மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலையிலான 12 மருத்துவர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு கருப்பு பூஞ்சை தொடர்பான இடைக்கால அறிக்கையினை இன்று தாக்கல் செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள்தான் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர். மே மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில், கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதிலிருந்து 2-3 வாரங்கள் கழித்துதான் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தெரிய வந்தது. கொரோனா தொற்று குறைவதால், கருப்பு பூஞ்சை பாதிப்பும் படிப்படியாகக் குறையும்.

தமிழ்நாட்டில் நேற்று (ஜுன்24) நான்கு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை, தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 41 லட்சத்து 27 ஆயிரம் 980 தடுப்பூசிகள் வந்துள்ளது. அவற்றில் ஒரு கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 25 ஜுன் 2021