மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

மாஜி அமைச்சருக்கு ஜாமீன் மறுப்பு!

மாஜி அமைச்சருக்கு ஜாமீன் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் மூன்று முறை கட்டாய கருகலைப்பு செய்துள்ளதாகவும், நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதன்படி மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். கடந்த 20ஆம் தேதி பெங்களுரூவில் வைத்து மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 2ஆம் தேதிவரை சைதாப்பேட்டை கிளை சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மணிகண்டன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை விசாரணையின்போது, இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் இந்த மனு இன்று (ஜூன் 25) நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், நடிகையை காயப்படுத்தியதாகவும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்தது. நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது. இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதே வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி மணிகண்டன் உதவியாளர் பரணிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி, புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை மனுதாரர் வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்பந்தப்பட்ட புகார் அளித்த பெண்ணை அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. அவர் மீதுள்ள மற்ற எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லாததால், பரணிதரனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 25 ஜுன் 2021