மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

கிஷோர் கே.சுவாமி-ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம்!

கிஷோர் கே.சுவாமி-ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம்!

அண்மையில் கைது செய்யப்பட்ட சமூக தள விமர்சகர் கிஷோர் கே.சுவாமி, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பல வழக்குகள் அவர்கள் மீது தொடரப்பட்டதை அடுத்து பாய்ச்சப்பட்டுள்ள இந்த குண்டர் சட்டத்தால் அவர்கள் ஒரு வருடத்துக்கு சிறையில் இருந்து வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக தளங்களில் திராவிட, இடது சாரி அரசியல் புள்ளிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யும் கிஷோர் கே. சுவாமி, கடந்த அதிமுக ஆட்சியில் பெண் பத்திரிகையாளர்களையும் கடுமையாக விமர்சித்தார். இதற்காக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி, திமுக தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டார். அதன் பின், ஏற்கனவே அவர் மீது பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்குகளின் அடிப்படையில் கிஷோர் கே.சுவாமி மீது குண்டர் சட்டம் இன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுஒருபக்கம் என்றால்...பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக மே 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் ஆசிரியர் ராஜகோபாலன். அவர் மீது மேலும் பல முன்னாள் மாணவிகள் தங்களிடம் பாலியல் நோக்கத்தோடு நடந்துகொண்டதாக புகார்கள் செய்தனர். இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீதும் இன்று குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இரு கைது சம்பவங்களில் தொடர்புடைய இருவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 25 ஜுன் 2021