மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

2டிஜி மருந்து: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

2டிஜி மருந்து: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த 2டிஜி மருந்தை தயாரிக்க 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

2டிஜி மருந்தை சந்தைக்கு கொண்டுவரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 2டிஜி மருந்தை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே 2டிஜி மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. நாள்தோறும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.

மீண்டும் இந்த மனு இன்று(ஜூன் 25) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “டிஆர்டிஓ கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு 40 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் இரு நாட்களில் குணமடைந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா தொற்று குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அழைத்துப் பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

2டிஜி மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும், மருந்தை உற்பத்தி செய்ய, மற்ற நிறுவனங்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

-வினிதா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வெள்ளி 25 ஜுன் 2021