மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் இன்று(ஜூன் 25) நடந்தது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அரசு சிறப்பு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதி பெறப்படும் என கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு அதிகாரிகள், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பகட்ட பணியையும் மேற்கொள்ள கூடாது என தெரிவித்தனர்.

கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 24 டிஎம்சி என மொத்தம் 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 25 ஜுன் 2021