மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

ஊரடங்கில் தளர்வா? : முதல்வர் முக்கிய ஆலோசனை!

ஊரடங்கில் தளர்வா? : முதல்வர் முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 25) மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வந்ததையடுத்து மே 10ஆம் தேதிமுதல் இருவாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அடுத்தடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஐந்தாவது முறையாக ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முதற்கட்டமாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனையை தொடங்கியுள்ளார். இதையடுத்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர், காவல்துறை தலைமை அதிகாரி, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதனால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தற்போது பின்பற்றப்படும் தளர்வுகள் 23 மாவட்டங்களுக்கும் அளிக்கப்படலாம். அந்த மாவட்டங்களிலும் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்க அனுமதிக்கலாம்.

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது. பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய அளவிலான நகைக் கடைகள், ஜவுளிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம். அதுபோன்று, சிறிய அளவிலான வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்கலாம். தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் அந்த மாவட்டங்களிலும் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மறுபக்கம், டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா அச்சத்தால் ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எப்படி இருப்பினும், இன்று அல்லது நாளை ஊரடங்கு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

வெள்ளி 25 ஜுன் 2021