மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

போலீஸ் அதிகாரிகள் நடத்திய திடீர் கூட்டம்: நடந்தது என்ன?

போலீஸ் அதிகாரிகள் நடத்திய திடீர் கூட்டம்: நடந்தது என்ன?

தமிழக காவல்நிலையங்களில் பொது மக்களிடம் போலீஸார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவசர கூட்டம் நடத்தி சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள்.

அதிமுக ஆட்சியில் காவல்துறையினர் மீது திமுகவினர் கடுமையாக புகார்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் கூட காவல்துறையினர் மீதான புகார்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக சேலம் மாவட்டத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் இடையிலான பாப்பநாயக்கன்பட்டி செக் போஸ்டில் டூவீலரில் மதுஅருந்திவிட்டு வந்த முருகேசன் என்பவரை நிறுத்தி விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் முருகேசனை எஸ்.ஐ.பெரியசாமி லத்தியால் கடுமையாக தாக்க, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் இறந்துவிட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் ஜூன் 24 ஆம் தேதி இரவு 7.30 முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் ஜூம் மூலமாக காவல்துறை அதிகாரிகளுக்கு இடையேயான கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர், துணை ஆணையர்கள், மண்டல ஐஜி, சரக டிஐஜி, மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகிய அதிகாரிகள் ஜூம் மீட்டிங்கில் கலந்துகொண்டார்கள்.

அதிகாரிகளிடம் பேசிய உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன், “பொதுவெளியிலும், காவல் நிலையத்துக்கு வரும் மக்களிடமும் அன்பாகப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் குறைகளைக் கேட்டு உடனே விசாரித்தால் அவர்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் ஏற்படும்.

அனைத்து காவல் நிலையங்களும் லஞ்சம் இல்லாத, லஞ்சம் வாங்காத காவல் நிலையமாக இருக்கவேண்டும். அதைதான் இந்த அரசும் எதிர்பார்க்கிறது, விரும்புகிறது. அதை விரைவில் அமல்படுத்துங்கள். சமூக விரோதமாக மணல் கடத்தல், கஞ்சா, கள்ளத்தனமாக மது நடமாட்டம் ஆகியவை இருக்கக்கூடாது. அதை ஒடுக்கத் தடுக்க உங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. அதற்காக யார் ரெகமண்டேஷனுக்கு வந்தாலும் கவலைப் படவேண்டாம். மறுத்துவிடுங்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தின் போது, போலீஸாருக்குத் தேவையான யூனிஃபார்ம் வாஷிங் அலவுன்ஸ், கிட் மெயின்டனென்ஸ் அலவன்ஸ், ரிஸ்க் அலவன்ஸ், பெட்ரோல் டீசல் அலவன்ஸ், டிஏ போன்றவை பற்றியும் அதிகாரிகள் சிலர் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு, “இதுகுறித்து விரைவில் பல திட்டங்களுடன் முதல்வரைச் சந்தித்து ஆலோசனைகள் செய்ய இருக்கிறோம். நல்ல செய்தி வரும்”என்று சொல்லியிருக்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு பொதுமக்களிடம் போலீஸாரின் அணுகுமுறையில் மாற்றம் வருகிறதா என்று பார்ப்போம்.

-வணங்காமுடி

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வெள்ளி 25 ஜுன் 2021