மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும், கோயில்களில் முடியாது: அமைச்சர்!

டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும், கோயில்களில் முடியாது: அமைச்சர்!

திருக்கோயில்களில் நடக்கும் குற்றம், முறைகேடு குறித்து மக்கள் புகாரளிக்க ஏதுவாக, இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்து அறநிலையத்துறையில் அதிரடியான மாற்றங்களும், திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த பின், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருகோயில்கள் உள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நன்செய், புன் செய் நிலங்கள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் உள்பட அசையா சொத்துக்கள் உள்ளன. கோயில்களிலும், அதன் சொத்துக்களிலும் நடைபெறும் தவறுகளை, குறைகளையும் சுட்டி காட்டுவதற்காக ’கோரிக்கைகளை பதிவிடுக’ என்ற முறை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், தொலைபேசி மூலமும் பக்தர்களும் பொதுமக்கள் பலரும் புகார்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மக்கள் புகார் அளிப்பதை எளிமையாக்கும் வகையில் குறை தீர்க்கும் அலுவலகத்தை இன்று தொடங்கி வைத்துள்ளோம். 044-28339999 என்ற தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கொரோனா முற்றிலுமாக குறையும்போது, ஊரடங்கு தளர்வுகளில் முன்னுரிமை அடிப்படையில் கோயில்களை திறக்க முதல்வர் அனுமதி அளிப்பார். கோயில்களில் பக்கதர்களுக்கு மட்டும்தான் அனுமதி இல்லை. தினசரி பூஜைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் உதவியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். கோயில்களில் போலீசார் உதவியுடன் மக்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. கோயிலில் நகை, சிலை திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

வெள்ளி 25 ஜுன் 2021