மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

பாலிடெக்னிக் சேர்க்கை: அமைச்சர் விளக்கம்!

பாலிடெக்னிக் சேர்க்கை: அமைச்சர் விளக்கம்!

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாலிடெக்னிக் முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதி நேர மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று(ஜூன் 25) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாடு முழுவதும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகளில் 18, 120 இடங்கள் உள்ளன. பதினோராம் வகுப்பில் மாணவர்கள் சேர்வதற்கு என்ன தகுதிகளோ, அந்த தகுதிகளின் அடிப்படையிலே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற முதல்வர் ஆணையின்படி இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதிவரை இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் சேருவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டியூசன் கட்டணம் கிடையாது. மாணவர்கள் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கம்பியூட்டர் சென்டர் செல்லாமல் மாணவர்களாகவே இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த துறையின் மூலம் மாணவர் சேர்க்கைக்காக 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 25 ஜுன் 2021