மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

அவைக் குறிப்பில் இருந்து ஒன்றியத்தை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கையில் ஆர்.எஸ்.எஸ். வாசனை!

அவைக் குறிப்பில் இருந்து ஒன்றியத்தை  நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி  கோரிக்கையில்  ஆர்.எஸ்.எஸ். வாசனை!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “ஒன்றிய அரசு என்ற புதிய சொல்லாடலை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பினார்.

அப்போது அவருக்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசு எனச் சொல்வதை சமூக குற்றம்போல யாரும் நினைக்க வேண்டாம். இந்த வார்த்தையைப் பார்த்து மிரளத் தேவையில்லை. சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத்தான் சொல்கிறோம். இந்தியா மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியமாக இருப்பதை நாங்கள் பயன்படுத்துகிறோம்; சட்டத்தில் இல்லாததை நாங்கள் சொல்லவில்லை.

திமுகவின் 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுத்துகிறோம். எனவே ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பயன்படுத்தினோம், பயன்படுத்துகிறோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என்று பதில் கூறினார்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 24) கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்யிட்டுத் தோல்வியுற்ற புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், “தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது வேறு; இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு. இந்திய மக்கள் அனைவரும் நம் மத்திய அரசை, இந்திய மத்திய அரசு என்று அழைக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் நம் மத்திய அரசை, இந்திய அரசு, இந்திய மைய அரசு அல்லது இந்திய நடுவண் அரசு என்று தமிழில் அழைத்தார்கள். ஆனால், தற்போது 7 மே 2021 முதல் முதல் இந்திய அரசை வேண்டுமென்றே ஒன்றிய அரசு என்று அழைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஒன்றியம் என்ற வார்த்தை ஊராட்சிகளின் தொகுப்பான உள்ளாட்சி அமைப்பைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இது மத்திய அரசை கொச்சைப்படுத்துகிறது.

21 ஜூன் 2021 ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் எழுதிய உரையை ஆற்றியுள்ளார். ஆளுநர் உரையின் தமிழ் பதிப்பில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பத்திகள் 6,7,9,13,14,15,25,32,34,38,40,56&58-ல் பயன்படுத்தியிருக்கிறார்கள். எங்கும் இந்தியா என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை. ஆளுநரின் உரையிலும் தமிழ் பதிப்பில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவைகளின் அனைத்து வடிவங்களும். ஒரு வார்த்தையில் தொடங்குகிறது. அவர்கள் பயன்படுத்தும், ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தை லட்சக்கணக்கான தேசபக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

இந்த விஷயத்தில், நமது இறையாண்மையுள்ள இந்திய நாட்டை ஒன்றிய அரசு என்பதன் உண்மையான அர்த்தம் மற்றும் இந்த வார்த்தைக்குப் பின்னால் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல் பற்றிய விவேகமுள்ள தமிழறிஞர்களிடமிருந்து கருத்து பெற ஆளுநருக்குப் பரிந்துரைக்கிறேன். மேலும் ஆளுநர் ஜூன் 2021 சட்டசபை பதிவுகளில் ஆளுநர் உரை உட்பட அனைத்து பதிவுகளிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைச் சட்டமன்றப் பதிவுகளில் இருந்து நீக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஏற்கனவே ஜூன் 8ஆம் தேதியும் ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் பாஜக சட்டமன்றத்தில் கேள்வி கேட்டு அத்தோடு விட்ட பிரச்சினையை டாக்டர் கிருஷ்ணசாமி ஆளுநர் வரை கொண்டு செல்கிறார். அவரது இந்தக் கடிதத்திலும், முந்தைய அறிக்கையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வாசனை அதிகமாகவே வீசுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வெள்ளி 25 ஜுன் 2021