மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

பயிர்க்கடன் முறைகேடு: ஆய்வுக்குப் பின் ரசீது!

பயிர்க்கடன் முறைகேடு: ஆய்வுக்குப் பின் ரசீது!

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பயிர்க்கடன் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டன.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து, 16ஆவது சட்டப்பேரைவைக் கூட்டத்தொடர் நேற்று நிறைவுபெற்றது. நேற்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாகப் பேசினார்.

“தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை ரூ.17,438.73 கோடி அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ரசீதுகளும் வழங்கப்பட்டன. ரசீது வழங்கப்படாதவர்களுக்கு ரசீது வழங்க வேண்டும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "31.1.2021இல் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ ரூ.12,100 கோடி அளவுக்கு அந்தத் தள்ளுபடியை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள்.

எல்லா வங்கிகளிலும் எந்த முறையில் அரசால் கடன் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மட்டுமல்லாமல், அனைத்து வங்கிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம், நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. 136 சங்கங்களில் கிட்டத்தட்ட ரூ.201 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ஏறத்தாழ ரூ.108 கோடி அளவுக்கும், அதேபோல 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளன.

எனவே, அனைத்து வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, ரூ.12,000 கோடியில், சேலம் மாவட்டத்தில் ரூ.1,350 கோடி, ஈரோட்டில் ரூ.1,085 கோடி அளவுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12,000 கோடி ரூபாய் தள்ளுபடி என்றால், எப்படி இரண்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.2,400 கோடி அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி கும்பகோணம் அருகே உள்ள ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 44 பொட்டலம் நகைகள் காணவில்லை. இது 300 பவுன் நகை, அதாவது 2,500 கிராமுக்கு மேலாக மாயமாகியுள்ளது. இது மட்டுமல்ல, இந்த வங்கியில் ரூ.11.60 லட்சம் கடன் திருப்பி செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இவை குறித்தெல்லாம் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்த பின்னர் ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 25 ஜுன் 2021