மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள்: அமைச்சர்!

தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள்: அமைச்சர்!

பத்து ஆண்டுகளில் அனைத்து பயிர்களின் உற்பத்தியில் முதலிடம் பெறும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மை துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களுடன் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண்மை கூடுதல் இயக்குநர் அருணா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “குறுவை சாகுபடி திட்டத்தின் வழிகாட்டு முறைகள்படி விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் ரசாயன உரங்களைத் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மண் வகை பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,10 ஆண்டுகளில் அனைத்து பயிர்களின் உற்பத்தியில் முதலிடம் பெறும் வகையிலும் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். 60 சதவிகித சாகுபடி பரப்பினை 10 ஆண்டுகளில் 75 சதவிகிதமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நடப்பு ஆண்டு முதலே எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

வெள்ளி 25 ஜுன் 2021