மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

2டிஜி மருந்து ஏன் விற்பனைக்கு வரவில்லை?: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

2டிஜி மருந்து ஏன் விற்பனைக்கு வரவில்லை?: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

கொரோனா தொற்றை குணப்படுத்த டிஆர்டிஓ கண்டுபிடித்த 2டிஜி மருந்தை விற்பனைக்கு கொண்டு வரக் கோரிய மனுவுக்கு நாளை (ஜுன் 25) ஒன்றிய அரசு விளக்கமளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சையின்ஸ், டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி எனும் பவுடர் வடிவ மருந்தை தயாரித்தது.

அவசர கால பயன்பாட்டிற்கு இம்மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியது. இந்த மருந்து உடலில் வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கும் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மே 17 ஆம் தேதியன்று 2 டிஜி மருந்து விநியோகத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றை குணப்படுத்த, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த 2 டிஜி எனும் மருந்தை சந்தைக்கு கொண்டு வரக்கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு இன்று(ஜூன் 24) நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " மருந்தின் அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இதை ஒன்றிய அமைச்சர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாள்தோறும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்" என வாதாடினார்.

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தொற்றைக் குணப்படுத்த உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்குக் கொண்டுவந்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

இந்த மனு குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (ஜூன் 25) ஒத்தி வைத்தனர்.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 24 ஜுன் 2021