மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு - ஜோதிடர்களால் குழப்பம்!

புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு - ஜோதிடர்களால் குழப்பம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைச்சரவை பொறுப்பேற்பதற்கு, என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சித் தலைவர்களும் தனித் தனியாக ஜோதிடம் பார்த்து நாள் குறிப்பதால், முதல்வர் ரங்கசாமி அப்செட்டில் உள்ளார் என அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வர் பதவி உட்பட ஆறு அமைச்சர்களில் பாஜகவுக்கு இரண்டு அமைச்சர், சபாநாயகர் பதவி, என்ஆர் காங்கிரஸுக்கு முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள், என நீண்ட பேச்சுவார்த்தை, போராட்டங்களுக்குப் பிறகு இரு கட்சியினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்ள நாள் நட்சத்திரம் பார்த்து, ‘21ஆம் தேதியை’ முடிவு செய்தார் பாஜக எம்.எல்.ஏ நமசிவாயம். அந்த தேதி பற்றி முதல்வர் ரங்கசாமி தனது நம்பிக்கைக்குரிய ஜோதிடரிடம் கேட்டபோது, ‘அந்த நாளில் பதவியேற்பு செய்தால் முதல்வர் பதவியை நமச்சிவாயம் ஆக்கிரமிப்பு செய்துவிடுவார். நீங்கள் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க நேரிடும். உங்கள் ராசிக்கு ’ஜூன் 24’ தான் சிறந்த தேதி’ என்று கூறியுள்ளார் ஜோதிடர்.

முதல்வர் ரங்கசாமியும் அவசரமாக அமைச்சர்கள் பட்டியலைத் துணை நிலை ஆளுநரிடம் நேற்று காலையில் வழங்கி, இன்று (ஜூன் 24) பதவியேற்றுக்கொள்ள அனுமதி கேட்டார், ஆனால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

மீண்டும் நமச்சிவாயம் ஜோதிடம் பார்த்து, ’ஜூன் 27ஆம் தேதியை’ குறித்துக் கொடுத்துள்ளார், அந்த தேதியில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர் பாஜக தலைவர்கள். அந்த தேதியைத் தான், துணை நிலை ஆளுநரும் முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள் பாஜகவினர்.

முதல்வர் ரங்கசாமியோ தனக்கு ராசியான தேதியில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறவில்லையே என்று அப்செட்டில் இருக்கிறாராம். இப்படியே இழுத்துக் கொண்டிருந்தால் புதுச்சேரியில் அடுத்த தேர்தலே வந்துவிடும் என்று சலிப்போடு சொல்கிறார்கள் மக்கள்.

-வணங்காமுடி

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வியாழன் 24 ஜுன் 2021