மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

கோவையைப் புறக்கணிக்கவில்லை: சட்டப்பேரவையில் முதல்வர்!

கோவையைப் புறக்கணிக்கவில்லை: சட்டப்பேரவையில் முதல்வர்!

கோவை மாவட்டத்தை எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் உரையின் மீது இரண்டாம் நாளாக நேற்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. ஏற்கனவே திமுக அரசு கோவையை புறக்கணிப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், நேற்றைய விவாதத்தின் போது, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,

"அனைவருக்குமான அரசு இது என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது என்றும், அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதால் கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கோவையை எந்தெந்த வகையில் அரசு புறக்கணிக்கிறது என்று சொன்னால் அதற்குப் பதில் அளிக்கலாம். வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கும் வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று எண்ணும் அளவிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும் எனத் தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே தெரிவித்தேன்.

கோவையை எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை. பிரதமரைச் சந்தித்து மனு அளித்த போது கூட கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். கோவைக்கு இன்னும் அதிகமான பணிகளைச் செய்வோம். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எங்களது பணிகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 24 ஜுன் 2021