மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

தடுப்பூசிப் பணியை அரசால் முன்னோக்கிக் கொண்டு செல்ல இயலவில்லை: ராகுல்

தடுப்பூசிப் பணியை அரசால் முன்னோக்கிக் கொண்டு செல்ல இயலவில்லை: ராகுல்

கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்ந்து பெரிய அளவில் செய்யப்படாவிட்டால், நம்நாடு பாதுகாப்பாக இருக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொரோனா தொற்றை கையாளும் திறன், தடுப்பூசி, ஆக்சிஜன் இருப்பு ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் இரண்டாம் அலை குறைந்து வருகிற சமயத்தில், தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி மட்டும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்திருந்தார். மறுநாளில் 53.4 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இத்தனை பேருக்கு எப்படி தடுப்பூசி போட முடிந்தது என்றும், மறுநாளில் அந்த எண்ணிக்கை குறைந்தது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரில், “கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்ந்து பெரிய அளவில் செய்யப்படாவிட்டால், நம்நாடு பாதுகாப்பாக இருக்காது. துரதிர்ஷ்டவசமாக பி.ஆர். (மக்களுக்கு தடுப்பூசி செலுத்துதல்) நிகழ்வை ஒன்றிய அரசால் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ட்விட்டரில், ”ஜூன் 21 அன்று 88.09 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மறுநாளில் 53.4 லட்சமாக குறைந்துள்ளது. டெல்டா பிளஸ் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா பரவ தொடங்கியிருக்கிறது. ஆனால், நாட்டில் வெறும் 3.6 சதவிகித மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாங்கிய தடுப்பூசிகளை ஒரே நாளில் போட்டு மார்தட்டிக் கொண்டு, மறுநாள் சும்மா இருக்க வேண்டியது” எனத் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில், “ஞாயிற்றுக்கிழமையன்று பதுக்கி வையுங்கள்; திங்கள்கிழமையன்று தடுப்பூசி போடுங்கள்; செவ்வாய்கிழமை பழைய நிலைமைக்கே செல்லுங்கள். இதுதான் ஒருநாள் கொரோனா தடுப்பூசி சாதனையின் ரகசியம். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப்பட வேண்டும். யாருக்கு தெரியும், மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசுக் கூட கொடுக்கலாம்” என்று விமர்சித்துள்ளார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 24 ஜுன் 2021