மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

2வது தவணை ரூ.2000: ஜூன் 25க்குள் வழங்க உத்தரவு!

2வது தவணை ரூ.2000: ஜூன் 25க்குள் வழங்க உத்தரவு!

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வரும் 25ஆம் தேதிக்குள் கொடுத்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஆட்சி அமைத்த முதல்நாளிலேயே முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கடந்த மே மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பானது நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில் நிவாரண தொகையும், பொருட்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் 25ஆம் தேதிக்குள் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கொடுத்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 23 ஜுன் 2021