மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

புதுச்சேரி அமைச்சர்கள் யார் யார்?

புதுச்சேரி அமைச்சர்கள் யார் யார்?

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சர்கள் பட்டியலைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் ரங்கசாமி இன்று (ஜூன் 23) வழங்கினார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியானது. இதைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பாஜக மற்றும் என்ஆர் காங்கிரசுக்கு இடையே அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் பாஜகவுக்கு இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் என்ஆர் காங்கிரசுக்கு மூன்று அமைச்சர்கள் பதவி என இரு கட்சியினருக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஒருவழியாக அமைச்சர்கள் பட்டியலும் தயார் செய்யப்பட்டது.

தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களுக்கு பிறகு, இந்த பட்டியலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இன்று வழங்கினார் முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு விழா ஓரிரு நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் பட்டியலில் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணன், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், திருமுருகன், லட்சுமி காந்தன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன.

முன்னதாக, சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 16ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

புதன் 23 ஜுன் 2021