எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது என்ன?

politics

தமிழகத்தின் 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி ஆளுநர் உரை நிகழ்த்திய பின்பு, கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அன்றைய தினம்( ஜூன் 21) மாலை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சட்டப் பேரவையில் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் கடமையாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர்களைப் பார்த்து, “அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் உழைப்பை மறக்கக்கூடாது. அமைச்சர்கள் என்பதால் கட்சிக்காரர்களை பார்க்காமல் சென்று விடாதீர்கள். அவர்களுக்கு மதிப்பும், முக்கியத்துவமும் கொடுங்கள். அதுபோன்று, எம்.எல்.ஏ.க்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், அவர்கள் கேட்பதைச் செய்து கொடுங்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை பார்த்து பேசிய ஸ்டாலின், இங்க இருக்க கூடிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எவ்வளவு பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லோருக்கும் அமைச்சர்கள் பதவி தர முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் உங்களுடைய, பிரச்சினைகள், கஷ்டங்களை சரி செய்து, நிச்சயமாக உங்களுக்கு வேண்டியதைச் செய்வேன்” என்று ஆறுதலாகப் பேசினார். முதல்வரின் இந்த பேச்சு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *