மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

அணில்களால் மின் தடை: செந்தில் பாலாஜி விளக்கம்!

அணில்களால் மின் தடை: செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டுகளுக்கு அணில்களும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.

இது சமூகதளங்களில் நகைப்புக்கும் விவாதத்துக்கும் உள்ளாகி அதன் அடுத்த கட்டமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 22ஆம் தேதி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

"கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன. அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும்கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன - என்று இதையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.

அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாகச் சித்திரிக்கும் டாக்டர் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்புப் பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்.

அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்" என்று ராமதாஸுக்கு விளக்கமளித்து இருக்கும் செந்தில் பாலாஜி மேலும்,

"பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும்பொழுதும் மின் தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குப் பெரிதன்று. திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

புதன் 23 ஜுன் 2021