மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

அணில்களால் மின்வெட்டு: செல்லூர் ராஜூவுக்கு போட்டியாக செந்தில்பாலாஜி

அணில்களால் மின்வெட்டு: செல்லூர் ராஜூவுக்கு போட்டியாக செந்தில்பாலாஜி

கடந்த அதிமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் கொடுக்கும் பேட்டிகள் கேலிக்கும் கிண்டலுக்கும் மீம்ஸுகளுக்கும் இரையாகிவிடும். அதுபோல இந்த திமுக ஆட்சியில் முதல் மீம்ஸ் ஹிட்டுக்கு ஆளாகியிருக்கிறார் மின் சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் முழுதும் ஆங்காங்கே மின் வெட்டு ஏற்படுவதாக சமூக தளங்களில் மக்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புள்ளி விவரங்களை அள்ளிக் கொடுத்தார்.

“தமிழ்நாட்டில் மின் கம்பிகளின் மீது விழும் நிலையில் இருக்கும் 83 ஆயிரத்து 553 மரக்கிளைகளை அகற்ற வேண்டியுள்ளது” என்று மரக்கிளைகளை கூட எண்ணி சொல்லிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த ஒன்பது மாதங்களாக மின் சார பராமரிப்புப் பணியே செய்யவில்லை. அதனால் மின்சார உள் கட்டமைப்பில் பலத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளை ஜூன் 19 ஆம் தேதி முதல் பத்து நாட்களில் தமிழ்நாடு மின்சாரவாரியம் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி செய்ய உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். எனவே இந்த பத்து நாட்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வெட்டு ஏற்படும். அதுபற்றி முன் கூட்டியே அறிவிக்கப்படும்”என்று கூறியிருந்தார்.

இதுமட்டுமல்ல இன்னொரு செய்தியாளர் சந்திப்பில், “மின் கம்பிகளில் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடொன்று உரசி அதனாலும் மின் தடை ஏற்படுகிறது”என்றும் கூறினார் செந்தில்பாலாஜி.

செந்தில்பாலாஜி கொடுத்த புள்ளிவிவரங்கள் விளக்கங்கள் எல்லாம் இந்த அணிலில் அடிபட்டு போய்விட்டது. சமூக தளங்கள் முழுதும், செந்தில்பாலாஜியின் அணில் காரணமே கலாய்க்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் செல்லூர் ராஜூ செய்த பணிகளை தற்போது செந்தில்பாலாஜி செய்யத் துவங்கிவிட்டார் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர். டிரெண்டிங்கில் இந்த அணில் விவகாரம் பேசப்பட அரசியல் தலைவர்களும் அணிலை கையிலெடுத்துவிட்டனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூலை 22) தனது ட்விட்டரில், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று கிண்டலடித்துள்ளார்.

-வேந்தன்

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

செவ்வாய் 22 ஜுன் 2021