மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

குறைந்த சிமென்ட் விலை!

குறைந்த சிமென்ட் விலை!

தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் சிமென்ட் விலை 55 ரூபாய் குறைந்துள்ளது.

தமிழகத்தில் சிமென்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தன. எனவே சிமென்ட் விலையை குறைக்க வேண்டுமென தமிழக அரசிடம் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சிமென்ட் விலை உயர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர் சங்கம், கொரோனா பரவலால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் சிமென்ட் விலை அதிகரித்துள்ளதாகவும். தொழில் துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பெருந் தொற்று சூழ்ந்துள்ள இந்த கடினமான நேரத்தில் பொது மக்களுக்குத் தகுந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமென்ட் கிடைக்கச் செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமென்ட் , ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அதிமுக ஆட்சி முதலே படிப்படியாக உயர்ந்து வருவதாகக் கூறினார். 420 ரூபாயிலிருந்த சிமென்ட் விலை 490 ரூபாயாக உயர்ந்ததாகவும், உற்பத்தியாளர்களிடம் பேசி சிமென்ட் விலை 460 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிமென்ட் விலையை மேலும் குறைக்க உற்பத்தியாளர்கள் உறுதி அளித்ததாகவும் கூறினார்.

இந்நிலையில். இன்று (ஜூன் 22) பிற்பகல் தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு அரசுடன் நடந்த ஆலோசனையை தொடர்ந்து, முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஒரு சிமென்ட் மூட்டையின் விலையை 25 ரூபாய் குறைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த இரு தினங்களில் சிமென்ட் விலை 55 ரூபாய் வரை குறைந்துள்ளது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 22 ஜுன் 2021