மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

வெளிமாநிலத்தவர்களுக்கு அரசுவேலை வழங்கியது குறித்து ஆய்வு: அமைச்சர்!

வெளிமாநிலத்தவர்களுக்கு அரசுவேலை வழங்கியது குறித்து ஆய்வு: அமைச்சர்!

வெளி மாநிலத்தவர்களுக்குத் தமிழகத்தில் அரசு வேலை வழங்கியது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், ‘கடந்த காலங்களில் தமிழ் தெரியாதவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களைத் தவிர்த்துவிட்டு வெளி மாநிலத்தவர்கள் அதிக பேர் பணியமர்த்தப்படுவதாகவும், வரும் காலத்தில் தமிழக அரசுப் பணிகளில் தமிழ் தெரிந்தவர்களே பணியாற்ற நடவடிக்கை எடுத்து, அதனை அரசு உறுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பேசினார்.

இதற்குப் பதிலளித்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளில் தமிழர்கள் அல்லாத வெளி மாநிலத்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது குறித்தும், வெளிமாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக எத்தகைய வழிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். வரும் காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என ஆவணங்கள் கொடுக்கும் பட்சத்தில் அதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில், வங்கி, டிஎன்பிஎஸ்சி, மின்துறை, ரயில்வே, நிலக்கரி உள்ளிட்ட நிறுவன பணிகளில் வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தமிழகத்தில் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார்.

-பிரியா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 22 ஜுன் 2021