மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

ஜாமீன் கேட்கும் மாஜி அமைச்சர்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

ஜாமீன் கேட்கும் மாஜி அமைச்சர்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், கொலை மிரட்டல், கட்டாய கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் வைத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.

இதைத்தொடர்ந்து மணிகண்டனின் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வரும் 24ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 22 ஜுன் 2021