மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

நிரந்தர சின்னம்: தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

நிரந்தர சின்னம்: தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்குப் புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் இதுபோல் நிரந்தர சின்னங்களை ஒதுக்க வகை செய்யவில்லை. அதற்குப் பதிலாகச் சின்னங்களின் பட்டியலை வெளியிட்டு அவற்றை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தி உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். விரைந்து வாக்குப்பதிவை நடத்தவும் வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னங்களைப் பிரபலப்படுத்த அரசியல் நிதியையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தினால், சின்னத்தைத் திரும்பப் பெறுவது, தேர்தலை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் இம்மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தேர்தல் அதிகாரியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்குப் பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 22 ஜுன் 2021