மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

சிறு உதவிதான், அதையும் மோடி அரசு மறுக்கிறது: ராகுல்

சிறு உதவிதான், அதையும் மோடி அரசு மறுக்கிறது: ராகுல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் இழப்பீடு என்பது சிறிய உதவிதான்; ஆனால், அதைகூட செய்ய மோடி அரசு தயாராக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசு கொரோனா தொற்றைக் கையாளும் விதம், தடுப்பூசி கொள்கை உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் இருக்கின்ற வேளையில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தது.

ஒன்றிய அரசின் இந்தப் பதிலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “உயிரை பணத்தால் ஈடுகட்டுவது சாத்தியமில்லை. அரசு வழங்கும் இழப்பீடு சிறு உதவிதான். ஆனால், மோடி அரசு அதைகூட செய்ய தயாராக இல்லை. முதலில் கொரோனா பெருந்தொற்றின்போது சிகிச்சை பற்றாக்குறை, தவறான புள்ளிவிவரங்கள் எல்லாவற்றுக்கும் மேல் அரசாங்கத்தின் கொடுமை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் தடுப்பூசி போட்டாரா, இல்லையா என்பது நாட்டுக்குத் தெரியாது. நீங்கள் (ராகுல் காந்தி) இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால், உடனடியாக நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்” என்று பேசியுள்ளார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 22 ஜுன் 2021