மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

மணிகண்டனை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? புகழேந்தி

மணிகண்டனை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? புகழேந்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கட்சியிலிருந்து ஏன் இன்னும் நீக்கவில்லை என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக இல்லையென்றால் அதிமுக 20 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணியின் பேச்சுக்குக் கடந்த ஜூன் 13ஆம் தேதி புகழேந்தி பதிலடி கொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால் தான் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆனார் என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் புகழேந்தியைக் கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, பாலியல் புகாரில் கைதான மணிகண்டனைக் கட்சியிலிருந்து நீக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முதலில் நடிகை சாந்தினியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்தார். பின்னர் சாந்தினி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்றார். அதன் பிறகு 5 லட்சம் ரூபாய் சாந்தினிக்குப் பணம் கொடுத்ததாகச் சொன்னார். தொடர்ந்து அபார்ட்மென்ட்டில் ஐந்து வருடங்கள் அவருடன் வாழ்ந்ததாகக் கூறினார்.

அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்படி ஒரு கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஏன் இன்னும் இந்த கட்சியில் இருக்கிறார். கட்சியிலிருந்து நீக்காதது ஏன்?

ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் ஒரே நொடியில் மணிகண்டனைத் தூக்கியிருப்பார். மணிகண்டனுக்கு ஏன் துணை போகிறார்கள் என்பது தெரியவில்லை.

2019ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை ஏன் நீக்கினார்கள்?. அந்த நடிகை மேலும் சில அமைச்சர்களையும் சந்தித்து உள்ளார். அமைச்சராக இருந்த மணிகண்டன் ஐந்தாண்டுகள் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாதா.

தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும். அதுதான் சட்டம். இந்த அரசு சரியான பாதையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இவ்வழக்கில் நீதிபதி பாலியல் வன்கொடுமை பிரிவை நீக்குமாறு கூறுவது வழக்கு சரியான பாதையில் செல்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று புகழேந்தி கூறினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

செவ்வாய் 22 ஜுன் 2021