மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

நாளை முதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

நாளை முதல் மெட்ரோ ரயில் இயக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடுதல் தளர்வுகளைத் தமிழக அரசு இன்று அறிவித்தது.

இந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கத்தில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். பின்பு தேவையின் அடிப்படையில் நேரம் மாற்றம் செய்யப்படும்.

காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும்.

மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் வருகை/வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியைக் கண்காணிப்பதற்காகத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளியை குறித்த எக்ஸ் (x) குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் இந்த குறியீடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 20 ஜுன் 2021