மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

ஆர்டிஓ அலுவலகங்களில் முறைகேடு: அமைச்சர் எச்சரிக்கை!

ஆர்டிஓ அலுவலகங்களில் முறைகேடு: அமைச்சர் எச்சரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் எளிதில் சான்றிதழ் பெற ஏதுவாக, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவீன மயமாக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போக்குவரத்துத் துறையில் போக்குவரத்து ஆணையர் கட்டுப்பாட்டில் இணை, துணை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. கடந்த ஆட்சியில் பல்வேறு குளறுபடிகளால், பொது மக்களுக்கு கணினி மற்றும் இணையதளம் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் உரிய நேரத்தில் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதை சீர்செய்யும் விதமாக, போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேவைகளான தகுதிச் சான்றிதழ் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகளை, மேலும் நவீனமயமாக்கி, பொதுமக்களுக்கு சேவைகள் எளிதில் கிடைக்க போக்குவரத்து துறையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

துறை ரீதியில் நிர்வாக சீர்கேடுகள் களையப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி, பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 20 ஜுன் 2021