மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் பதில்!

பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் மின் தடை:   அமைச்சர் பதில்!

பராமரிப்பு பணி இல்லாததால்தான் மின் தடை ஏற்படுகிறது என்பதை முன்னாள் அமைச்சர் தங்கமணி புரிந்து கொள்ள வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 20) திறந்து வைத்தார்.

மின் நுகர்வோர் சேவை தொடர்பாக 9498794987 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் தெரிவிக்கும் நுகர்வோருக்கு புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துகுறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் தடை தொடர்பான முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “மின்மிகை மாநிலம் என்றால், ஏன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை என்றுதான் கேட்கிறேன். பரமாரிப்பு பணிகளால்தான் மின் தடை ஏற்படுகிறது என்பதை முன்னாள் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும். காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது ஏன் மின்தடை ஏற்படுகிறது என்று கேள்வி கேட்டிருந்தார். பராமரிப்பு இல்லையென்றால் விண்ட் மில் எப்படி பயன்படுத்த முடியும், மின் சப்ளை எப்படி கொடுக்க முடியும். அவர்கள் தொகுதியான நாமக்கல் மாவட்டத்திலேயே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

மீண்டும் சொல்கிறேன். 9 மாத காலம் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் மின்தடை ஏற்படுகிறது. மின்வாரியத்துக்கு அதிக கடைமை உள்ளது; சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை தமிழ்நாடு வரலாற்றிலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு மூன்று வாய்ப்புகளை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளில் முதல்வரின் உத்தரவுப்படி கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் சட்டமன்றம் கூட இருக்கிறது. அதில் நீங்கள் கேட்கக் கூடிய முறைகேடு புகார் உள்ளிட்ட அனைத்துக்கும் பதில் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 20 ஜுன் 2021