மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியா?

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியா?

கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்து என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மே 31, ஜூன் 7, ஜூன் 14, ஜூன் 21 என நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன் எதிரொலியாகத் தமிழகத்தில் பாதிப்பு 8000 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு படிப்படியாக நோய் பரவல் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும் அதில் தளர்வுகள் அளிக்கப்படுவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர், இந்திய மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகவும் மூன்றாம் அலையின் தாக்கம் மற்றும் அதை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவக் குழுவினர், தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 50 சதவிகிதப் பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்கப் பரிந்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்குவது, ஏசி வசதி அல்லாமல் கடைகளைக் கட்டுப்பாடுகளுடன் திறப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 20 ஜுன் 2021