மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

சசிகலாவைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: நத்தம் விசுவநாதன்

சசிகலாவைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: நத்தம் விசுவநாதன்

சசிகலா தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆடியோக்களுக்கு அதிமுகவில் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஜூன் 19) முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்து சசிகலாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

“அதிமுக இந்தத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பை இழந்தாலும் அதை தோல்வி என்று சொல்ல முடியாது. அதை கௌரவமான தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகும் இப்போது வலிமையோடு ஒற்றுமையாக இயங்கி வருகிறது அதிமுக. சசிகலா எப்படியாவது அதிமுகவைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று துடிக்கிறார்.

அம்மா இருக்கும்போதே அம்மாவுக்குத் தெரியாமல் பல விஷயங்களை செய்தவர் சசிகலா. அம்மா தன் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவர் சசிகலா. அதெல்லாம் அப்போது அம்மாவின் அருகே இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும், அதிமுக இப்போதும் வலிமையாக இருப்பதைப் பார்த்து அதை கைப்பற்றத் துடிக்கிறார்,குறுக்கு வழியைக் கையாளப் பார்க்கிறார். எங்கேயோ ஒரு சிலருடன் போனில் பேசினால், கோடிக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட இந்த இயக்கத்தைக் கைப்பற்றிவிட முடியுமா? இது நகைப்புக்குரியது. அந்த அம்மாவால் ஒரு சதவிகிதத் தாக்கத்தைக் கூட பாதிப்பைக் கூட ஏற்படுத்த முடியாது.

இதை எடுத்துச் சொல்லத்தான் தொண்டர்களின் உணர்வை எடுத்துச் சொல்லத்தான் மாவட்ட வாரியாக தீர்மானம் போட்டு வருகிறோம். இதை யாரும் சொல்லவில்லை. நாங்கள் அணிகளாக இருந்து இணைந்தபோது ஏற்பட்ட சசிகலா இல்லாத கட்சி, ஆட்சி என்பதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. தாயாக இருந்தால்தானே ஏற்றுக்கொள்ள முடியும். பேயாக இருந்தால்?

சசிகலா கட்சிக்குள் வருவதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப் படாத அடிஷனல் லக்கேஜ் என்றுகூட சொல்ல மாட்டேன், வேஸ்ட் லக்கேஜை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சசிகலா தவிர்க்க முடியாத சக்தி அல்ல, தவிர்க்கப்பட வேண்டிய சக்தி” என்று கூறியுள்ளார் நத்தம் விசுவநாதன்.

2017ஆம் ஆண்டு சசிகலாவுக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தர்மயுத்தம் நடத்தியபோது அவரோடு சேர்ந்தவர் நத்தம் விசுவநாதன். ஒருகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து விலகி எடப்பாடியின் ஆதரவாளராகி விட்டார்.

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் முக்கியமான ஐவர் குழுவில் ஒருவராக இருந்தவர் நத்தம் விசுவநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 20 ஜுன் 2021