மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

கொரோனா உயிரிழப்பு விவரங்கள்: தலைமைச் செயலாளர் உத்தரவு!

கொரோனா உயிரிழப்பு விவரங்கள்: தலைமைச் செயலாளர் உத்தரவு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் சரியாக தர வேண்டும். மருத்துவமனைகள் சரியாக விவரம் அளிக்காததால் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அரசு பலமுறை அறிவுறுத்தியும், மருத்துவமனை நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக தலையிட்டு, கொரோனாவால் உயிரிழப்போரின் விவரங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தோரின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை தாமதமில்லாமல் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 20 ஜுன் 2021