மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 ஜுன் 2021

மீண்டும் மினி கிளினிக்குகள் : மா.சுப்பிரமணியன்

மீண்டும் மினி கிளினிக்குகள் : மா.சுப்பிரமணியன்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு பணியாற்றியவர்கள் தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் பணியாற்றுகின்றனர். இதனால் மினி கிளினிக்குகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த கிளினிக்குகள் மூடப்பட்டுவிடுமோ என்று கேள்வி எழுந்த நிலையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தவுடன், அங்கு பணியாற்றியவர்களைக் கொண்டு மீண்டும் மினி கிளினிக்குகள் செயல்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 6 படுக்கை வசதியுடன் கூடிய கொரொனா சிறப்புப் பிரிவைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.எல்.ஏ. உதயநிதி இருவரும் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தைப் பொறுத்தவரை 36000 என்ற எண்ணிக்கையிலிருந்த கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறுவதால், மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1.79 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளது.

தமிழகத்தில் துவங்கப்பட்ட மினி கிளினிக் மையத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள் கொரோனா சிறப்பு மையங்களில் பணியாற்றி வருகின்றனர். எனவே தமிழகத்தில் பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறையும் போது, மீண்டும் மினி கிளினிக் செயல்படும்.

தடுப்பூசியை பொறுத்தவரை முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக நீண்ட வரிசையில் நின்று மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இதுவரை 1.14கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. இன்று மாலை 3 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

தமிழகத்தில் நேற்று இரவு வரை 2,382 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்ட 1,111 பேர் குணமடைந்துள்ளனர். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வருகிறது. இதனை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 19 ஜுன் 2021