மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 ஜுன் 2021

அவசர சுற்றுப் பயணம்: சசிகலாவை முந்த எடப்பாடி திட்டம்!

அவசர சுற்றுப் பயணம்: சசிகலாவை முந்த எடப்பாடி திட்டம்!

எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பரபரப்பாகவே இருக்கிறது. அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளர் சசிகலா, மீண்டும் தான் கட்சியைக் கைப்பற்றப் போவதாகவும் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் நேரடியாக வர இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் அலைபேசி உரையாடல் நிகழ்த்தி அதை கவனமாக வெளியிட்டும் வருகிறார்.

இதுவரை சசிகலாவின் 40க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவுக்குள் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் (ஜூன் 17) சேலம் மாவட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படியே ஒவ்வொரு மாவட்டமாக சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

இதுவும்போதாது என்று நினைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது அதிரடி திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறார். அதாவது ஊரடங்கு முடிந்த நிலையில் சசிகலா தொண்டர்களை சந்திக்க பயணம் செய்வது என்ற முடிவில் இருக்கிறார். அவரை முந்திக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமாக சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசும் முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கான பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுமைக்கும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்டச் செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரையிலான அதிமுக நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவது, அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது என்ற திட்டம் போட்டு பயணத்துக்கான நிகழ்ச்சி நிரலை எடப்பாடிக்காக ஒரு குழுவினர் தயாரித்து வருகிறார்கள்.

இந்தப் பயணம் மூலம் அதிமுகவின் நிர்வாகிகளை முழுமையாக தனது ஆளுமைக்குள் கொண்டுவருவது என்பதும், அதைவைத்தே இந்த வருடத்துக்குள் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிப்பது என்பதும்தான் எடப்பாடியின் திட்டமென்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 19 ஜுன் 2021