மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

பிளஸ் டூ மதிப்பெண் வழங்குவது எப்படி?: அமைச்சர் மகேஷ்

பிளஸ் டூ மதிப்பெண் வழங்குவது எப்படி?: அமைச்சர் மகேஷ்

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியாக நடத்தப்படும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை வெளியிட்டது.

அதுபோன்று தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த ஆலோசனையின் அடிப்படையிலும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் முறையையும் ஆராய்ந்து, அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

"தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. பள்ளிக் கட்டணத்தைக் கட்டவில்லை என்று ஆன்லைன் கிளாஸ் அல்லது ஜூம் மூலம் நடத்தப்படும் வகுப்புகளைக் கட் செய்வதாகப் புகார்கள் வந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு லட்சம் லேப்டாப்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கும் சேர்த்துத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி லேப்டாப்கள் வழங்கப்படும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது. இனி அந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது. அந்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் நிலுவைத் தொகை இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது” எனவும் கூறினார்

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வெள்ளி 18 ஜுன் 2021