மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

சிவசங்கர் பாபா மருத்துவமனைக்கு மாற்றம்!

சிவசங்கர் பாபா  மருத்துவமனைக்கு மாற்றம்!

பள்ளி மாணவிகளை பாலியல் இச்சைக்கு உட்படுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர்பாபாவை டெல்லி சென்று கைது செய்து வந்த தமிழக சிபிசிஐடி போலீஸார், நேற்று (ஜூன் 17) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை ஜூலை 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று பகல் சிவசங்கர் பாபாவுக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு, அதனால் அவர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, “எனக்கு உடல் நிலை சரியில்லை. என்னை சிறைக்கு அனுப்பாதீர்கள்” என்று நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்தார் சிவசங்கர் பாபா. அவரது வழக்கறிஞர்களும் அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடந்திருப்பதை சுட்டிக் காட்டி பாபாவை சிறைக்கு அனுப்பாமல் மருத்துவமனைக்கு அனுப்புமாறு வாதாடினார்கள்.

ஆனால், நீதிபதி அம்பிகா சிபிசிஐடி போலீஸார் சமர்ப்பித்த சிவசங்கர் பாபாவின் உடல் நிலை சான்றிதழ்களை ஏற்று அவரை சிறைக்கு அனுப்பினார். இந்த நிலையில் நேற்று இரவை சிறையில் கழித்த சிவசங்கர் பாபாவுக்கு இன்று காலை 11 மணி வாக்கில் சிவசங்கர் பாபாவுக்கு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்து சிறைத் துறை அனுமதியோடு அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபவை யாரேனும் சந்திக்கலாம் என்பதால் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

-வேந்தன்

டேராடூன் முதல் செங்கல்பட்டு வரை-சிவசங்கர் பாபா சேஸிங் ரிப்போர்ட்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 18 ஜுன் 2021