^வன விலங்குகளை பாதுகாக்க பணிக்குழு!

politics

கொரோனா தொற்றிலிருந்து வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறை முதன்மைச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்டலூர் பூங்காவில் கொரோனா தொற்றால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டன. இதில் நீலா, பத்மநாபன் என்ற இரண்டு சிங்கங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் ஆன்டிபயாடிக் மற்றும் பிற நோய்த்தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வனவிலங்குகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று(ஜூன் 18) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்கவும், குறைக்கவும் மற்றும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும், தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் – வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்), முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்புச் செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் – வனத்துறை, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இந்திய வனப்பணி ஓய்வு அதிகாரி சுந்தரராஜூ, முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் தியோடர் பாஸ்கரன், வனவிலங்குப் பாதுகாவலர் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு (State Level Task Force) ஒன்றினை அமைத்துள்ளது.

இப்பணிக்குழு நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து தொடர் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *