மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு!

தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொறியியல், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதற்குரிய காரணங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது. இக்குழுவில் கால்நடைத்துறை, வேளாண்துறை, மீன்வளம், சட்டத்துறை, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர், தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 18) நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன், “அரசு பள்ளி மாணவர்களில் 2 முதல் 4 சதவீதம் பேர் மட்டும் தொழில்நுட்ப கல்வியில் சேர்கின்றனர். அதனால், தொழில்நுட்ப கல்வியில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனி இடஒதுக்கீடு வழங்க முடிவெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அவர்களின் சமூக பொருளாதாரம் மேம்படும்.

இதுகுறித்து துறை வாரியான தரவுகளை அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறோம். தரவுகளின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை ஆய்வு செய்து பரிந்துரை அளிக்கவுள்ளோம். அரசு நிர்ணயித்த ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்தார்.

இக்குழுவின் அடுத்த ஆய்வு கூட்டம் ஜூன் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 18 ஜுன் 2021