மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

மாஜி அமைச்சரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

மாஜி அமைச்சரை கைது செய்ய போலீசார்  தீவிரம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருமணம் செய்து கொள்வதாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத் தாக்கல் செய்தார். அதேசமயம் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று நடிகை சாந்தினியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கைக் கடந்த ஜூன் 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மணிகண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எனவே, மணிகண்டனைக் கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மணிகண்டன் மதுரையில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்து அழைத்து வர இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்ததில், “இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சுதா, மணிகண்டனைக் கைது செய்வதற்கான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆனால் மணிகண்டனைக் கைது செய்யத் தனிப்படைகள் எதுவும் அமைக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 18 ஜுன் 2021