மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

அரசாங்கத்தின் கவனத்துக்கு…

அரசாங்கத்தின் கவனத்துக்கு…

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே மீண்டும் அனைத்துப் பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரை வைக்க வேண்டும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவர்கள் உடனடியாக செயல்பட்டு தன் துறையிலிருந்த மதச் சார்புள்ள திருவள்ளுவரை அகற்றிவிட்டு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரை வைத்துவிட்டதாக டீவீட் செய்திருந்தார்.

ஆனால், அதிலும் கூட அங்கீகரிக்கப்பட்ட உண்மையான திருவள்ளுவரைக் காணவில்லை. போலியாக வரையப்பட்ட வள்ளுவரை அவர் தன் அலுவலகத்தில் வைத்தது கண்டு தமிழுணர்வாளர்களுக்கு அதிர்ச்சி மேலிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து திருவள்ளுவரை உலகுக்கு வரைந்தளித்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் மகனும் எழுத்தாளரும் இயக்குனருமான வே.ஸ்ரீராம் சர்மா அவர்கள் முதலமைச்சருக்கும் – தலைமை செயலாளருக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அது, பின்வருமாறு :

பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கட்கு,

திருவள்ளுவருக்கு திருவுருவம் கொடுத்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா குடும்பத்திடமிருந்து பணிவார்ந்த வணக்கம் !

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே மீண்டும் அனைத்துப் பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரை வைக்க வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிட்டதைக் கண்டு நன்றியோடு பெரும் மகிழ்ச்சி கொண்டோம்.

ஆனால், மாற்றி வைக்கப்பட்ட திருவள்ளுவர் படமும் தவறான படமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழாய்ந்த தங்கள் ஆளுகையில் இதுபோன்ற தவறுகள் நடந்துவிடக் கூடாது - தமிழ் மக்களுக்கு ஓர் தவறான வழிகாட்டுதலாக அது இருந்துவிடக் கூடாது என்பதனால் தங்கள் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு வருகிறேன்.

உண்மை எது போலி எது என இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் ஒரிஜினல் படத்தை ( HI - Res ) கொடுத்து உதவவும் தயாராக இருக்கிறேன்.

கண்டு ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் தங்களுடன்,

வே.ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர் - இயக்குனர்

ஓவியப் பெருந்தகை

கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் மகன்.

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 18 ஜுன் 2021