மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

புதுச்சேரி அமைச்சர்கள் யார் யார்?: ஜாதகம் பார்க்கும் ரங்கசாமி

புதுச்சேரி அமைச்சர்கள் யார் யார்?: ஜாதகம் பார்க்கும் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜாதகம் பார்த்து அதன் அடிப்படையில் அமைச்சர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தேஜ கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இதில், பாஜக ஆறு இடங்களிலும், என் ஆர் காங்கிரஸ் பத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக கடந்த மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார்.

முதல்வர் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்தும் இன்னும், அமைச்சர்கள் யார் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அமைச்சரவை பொறுப்பேற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடையே அமைச்சர்கள் பதவி பங்கிடுவதில் முதலில் இழுபறி ஏற்பட்டது. பின்னர், பாஜகவுக்கு இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் பதவி, என் ஆர் காங்கிரஸுக்கு முதல்வர் உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி என்று இரு கட்சியினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சீனியர்களான தேனி ஜெயக்குமார், ராஜவேல் மற்றும் லட்சுமி நாராயணன் இருந்தாலும், முதல்வர் ரங்கசாமியை பொறுத்தவரையில் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஜோதிடத்தை கணித்த பிறகுதான் யார், யார் அமைச்சர்கள் என்று முடிவு எடுப்பாராம்.

இந்நிலையில், “ரங்கசாமி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ஜோதிடம் பார்த்தாலும் பரவாயில்லை, பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகிய மூன்று பேரின் ஜாதகத்தை பார்த்துள்ளார். இதில், நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் இருவரது ஜாதகமும் நன்றாக உள்ளது என பாஜக தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார். இதனால் அமைச்சர் பதவிக்கு காத்திருந்த ஜான்குமார் விரக்தியில் இருக்கிறார்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 18 ஜுன் 2021